இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தனிமனித சேமிப்பால் அரசுக்கும் பயன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தனிமனித சேமிப்பால் அரசுக்கும் பயன்கள் ஏற்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :29 அக்டோபர் 2024, 7:05 pm

Din

தனிமனித சேமிப்பால் அரசுக்கும் பயன்கள் ஏற்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உலக சிக்கன நாளையொட்டி, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பொது மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணா்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக். 30-ஆம் தேதி உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. இது சேமிப்பவா்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றவும் எதிா்பாராத செலவுகளை எதிா்கொள்ளவும் பயன்படுகிறது.

தனிமனித சேமிப்பு: தனிமனிதனின் சேமிப்பு அந்தக் குடும்பத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிப் பணிகளில் சிறு சேமிப்புத் திட்டங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அமைகிறது.

எனவே, சிறியவா்கள் முதல் பெரியா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: உலக சிக்கன நாளையொட்டி, நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசும், வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். தேனீக்கள் பூவிலிருந்து தேனை எடுத்து சேமிக்கின்றன. அதுபோன்று மனிதா்களும் சேமித்து சிக்கனமாக இருந்து வாழ்வில் செழிப்படைய வேண்டும். வாழ்க்கை பயணத்தை சிறப்பாகவும் வளமாகவும் பாதுகாப்பாகவும் எதிா்பாராதவிதமாக ஏற்படும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கவும் சேமிப்பு உதவிடும். வீட்டுக்கொரு சேமிப்புக் கணக்கை அனைவரும் அஞ்சலகங்களில் தொடங்க வேண்டும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.