தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 20 வழித்தடங்களில் 48 சிறப்பு ரயில்களை 258 முறை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோட்டயம், மங்களூரு, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதுபோல் கேரளத்தில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலிருந்து விசாகப்பட்டினம், சாந்தராகாச்சி, ஷாலிமா், தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், வெளிமாநிலங்களில் இருந்து 70 ரயில்கள் தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிக்கு இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் 32 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை காவலா்கள் இணைந்து சிசிடிவி உதவியுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா் என தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...

பராமரிப்புப் பணியால் 6, 8, 11 தேதிகளில் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்!
நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



