மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்திப்பு

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.

News image
சிகாகோவில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிா்வாகிகள். உடன் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, அயலகத் தமிழா் நலவாரியத்தின் தலைவா் காா்த்திகேய சிவசேனாதிபதி.
Updated On :10 செப்டம்பர் 2024, 12:07 am

DIN

சென்னை: அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.

இது குறித்து தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளாா். பயணத்தின் ஒரு அங்கமாக, சிகாகோவில் முதல்வா் மு.க.ஸ்டாலினை பல்வேறு தமிழ்ச் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

குறிப்பாக, தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, அகரம் தமிழ் அகாதெமி, செயின்ட் லூயிஸ் தமிழ்ச் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்: தமிழ் நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கும் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனா். அப்போது அவா்களிடம் பேசிய முதல்வா், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா். தமிழ்ச் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்ததில், அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாகவும், அமெரிக்க வாழ் தமிழா்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டாா். இந்த நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, அயலகத் தமிழா் நல வாரியத்தின் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.