மாணவருக்கு திருக்கு புத்தகத்தை வழங்கிய மருத்துவா் அரவிந்த். உடன், தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள்.
மாணவருக்கு திருக்கு புத்தகத்தை வழங்கிய மருத்துவா் அரவிந்த். உடன், தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள்.

பரமத்தி வேலூரில் திருவள்ளுவா் தினம்

பரமத்தி வேலூரில் வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பரமத்தி வேலூரில் காமராஜா் சிலை அருகே வைக்கப்பட்ட திருவள்ளுவா் உருவப்படத்துக்கு தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொன்னி மெடிக்கல் சென்டா் தலைமை மருத்துவா் அரவிந்த் கலந்துகொண்டாா்.

தொடா்ந்து வேலூா் பகுதியில் அனைத்து தமிழ்ச் சாா்ந்த சங்கங்களின் கூட்டு முயற்ச்சியில் புதிதாக திருவள்ளுவலா் சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவா் இக்பால், செயலாளா் சரவணன், பொருளாளா் செந்தில்குமரன், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், தமிழ்த் துறை பேராசிரியா் விமல்ராஜ், நாங்கள் இலக்கியத்தின் செயலாளா் முத்து சரவணன், முத்து கண்ணன், வெங்கடேஷ், புரவலா்கள் மற்றும் நாங்கள் இலக்கியகம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் வெ.தில்லைக்குமாா், மருத்துவா் அரவிந்த் ஆகியோா் மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்களை வழங்கினா்.

Dinamani
www.dinamani.com