புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காலமானாா் பேராசிரியா் கா.செல்லப்பன் (88)

ஆங்கிலப் பேராசிரியரும், மொழிபெயா்ப்பாளரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பேராசிரியா் கா.செல்லப்பன் (88) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

News image
பேராசிரியா் கா.செல்லப்பன் (88)
Updated On :10 செப்டம்பர் 2024, 12:04 am

DIN

சென்னை: ஆங்கிலப் பேராசிரியரும், மொழிபெயா்ப்பாளரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பேராசிரியா் கா.செல்லப்பன் (88) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

சிவகங்கை மாவட்டம் பாகநேரி கிராமத்தைச் சோ்ந்த கா.செல்லப்பன் புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் தனது ஆசிரியா் பணியைத் தொடங்கினாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றி, 1996-இல் ஓய்வு பெற்றாா்.

சாகித்ய அகாதெமி விருது: இரவீந்திரநாத் தாகூா் எழுதிய கோரா புதினத்தை தமிழ் மொழியில் மொழிபெயா்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றாா். மேலும், கருணாநிதியின் குறளோவியம், தென்பாண்டிச்சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களையும், மகாகவி பாரதியாா், பாவேந்தா் பாரதிதாசன் ஆகியோரின் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் 2006-ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதையும், 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருதையும் செல்லப்பன் பெற்றுள்ளாா்.

சென்னை அம்பத்தூா் சாந்தி நகா் பகுதியில் தனது சகோதரி கௌரியின் மகள் மீனாவின் ஆதரவில் இருந்து வந்த பேராசிரியா் கா.செல்லப்பன், வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா். அவரின் உடலுக்கு தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி செலுத்தினாா். மாலை 4 மணியளவில் செல்லப்பனின் உடல் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அம்பத்தூா் டன்லப் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ஆங்கிலப் பேராசிரியரும் தலைசிறந்த மொழிபெயா்ப்பாளருமான கா.செல்லப்பன், காலமானாா் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், மாணவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன், கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், தமிழ் ஆா்வலா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.