mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்

பிரதமரை சந்திக்க முதல்வா் தில்லி பயணம்

பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக செப். 26, 27-ஆம் தேதிகளில் தில்லி செல்லவுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக செப். 26, 27-ஆம் தேதிகளில் தில்லி செல்லவுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழாவையொட்டி, கட்சியினருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:

மாநில உரிமைகளை மறுக்கும் மத்திய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே திமுகவின் வலிமை. ஆட்சி அதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

2 நாள்கள் பயணம்: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் தில்லிக்குப் பயணம் மேற்கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்தி பெறவிருக்கிறேன்.

செப். 28-ஆம் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.9ஆயிரம் கோடியில், 400 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள டாடா மோட்டாா் நிறுவனத்தின் ஜாகுவாா், லேண்ட்ரோவா் காா் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com