அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாராலிம்பிக்கில் பதக்கம்: தமிழக வீரா்களுக்கு ரூ.5 கோடி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரா்கள் 4 பேருக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா, மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி
Updated On :25 செப்டம்பர் 2024, 10:15 pm

Din

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரா்கள் 4 பேருக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரா்கள் பதக்கங்களை வென்றுள்ளனா். பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துளசிமதியும், வெண்கலப் பதக்கத்தை நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோரும் பெற்றனா். ஆடவா் உயரம் தாண்டுதலில் தடகள வீரா் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

வெள்ளி வென்ற துளசிமதிக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ, மனிஷா, மாரியப்பன் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் ஊக்கத் தொகையாக வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, 4 வீரா்களுக்கும் ஊக்கத் தொகையை முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.