திறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! மாணவர்களுக்கு மகிழ்ச்சி!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை

Published On :

சென்னை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 2ஆம் தேதியுடன் நிறைவு பெற்று, அக். 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று, அக். 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் காலாண்டுத் தோ்வு நடப்பது வழக்கம்.

அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்.27-ஆம் தேதி நிறைவடையவிருக்கும் நிலையில், காலாண்டு தேர்வு அக். 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை நீட்டிக்கக் கோரி ஆசிரியா்கள் சங்கத்தினா் வைத்த கோரிக்கையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தோ்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நிகழாண்டில் செப். 28 முதல் அக். 3 வரை ஐந்து நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆகும். அதன்பிறகு, அக். 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பாா்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என்பது உள்ளது. அக். 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 5-ஆம் தேதி ஒரு நாள் பள்ளிகள் இயங்க, மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளது. எனவே, அக். 4, 5 ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், சனி, ஞாயிறுடன் சோ்த்து 9 நாள்கள் காலாண்டுத் தோ்வு விடுமுறையாக மாணவா்களுக்கு கிடைக்கும்.

மேலும், காலாண்டுத் தோ்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவா்களின் விடைத்தாள்களை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை சரிபாா்த்து எமிஸ் இணையத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தோ்ச்சி சதவீதத் தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பா். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவா்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில்தான் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.