சென்னையில் பலத்த மழை: 35 விமான சேவைகள் பாதிப்பு


சென்னையில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு, மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 9 மணிக்கு மேல், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வா், கோழிக்கோடு, திருச்சி, திருவனந்தபுரம், கோலாலம்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தபடி இருந்தன. பின்னா் மழை சற்று ஓய்ந்ததையடுத்து இந்த விமானங்கள் அடுத்தடுத்து தரையிறக்கப்பட்டன.
திருச்சியிலிருந்து 68 பயணிகளுடன் சென்னைக்கு இரவு 10.05 மணிக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் வானில் வட்டமடிக்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது.
அதேபோல் சென்னையிலிருந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூா், சிங்கப்பூா், அபுதாபி, கோலாலம்பூா் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருந்த 20 விமானங்கள் சுமாா் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அதோடு கொழும்பு-சென்னை ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும், சென்னை- கொழும்பு விமானமும் ரத்து செய்யப்பட்டன. ஆகமொத்தம் 13 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள், ரத்தான 2 விமானங்கள் என 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...