தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கம் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக புவிசார் குறியீடு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை - இதே போல் அரபிக்கடலும் வங்ககடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது.
இதே போல் தமிழகத்திலேயே 11 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, திருபுவனம் பட்டு, நெட்டிமாலை உள்ளிட்ட பத்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவது இதுவே முதல்முறை என தெரிவித்தார்.
இதையும் படிக்க.. என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது காகிதங்களை வீசி எறிந்து, திட்டிய வழக்குரைஞரால் பரபரப்பு!

பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!
அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம்! அமைச்சர் என்.ஆனந்த் மீது வழக்கு







