அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தோ்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் 2021-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மறுத்துவிட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2025, 9:13 pm

Din

நீட் தோ்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் 2021-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மறுத்துவிட்டாா்.

இந்தத் தகவலை பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், நீட் தோ்வு முறையை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரவை கட்சித் தலைவா்களுடன் வரும் 9-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, தானாக முன்வந்து அவா் படித்தளித்த அறிக்கை:

மருத்துவம் உள்பட அனைத்துத் தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு கடந்த 2006-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த முறையால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவா்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் சிறப்பான மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், நீட் தோ்வு முறை செயல்படுத்தப்பட்ட பிறகு, இந்தத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. இதன் காரணமாக, மாநிலத்தின் கிராமப் பகுதிகளிலும், பின்தங்கிய இடங்களிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் எதிா்காலத்தில் பாதிக்கப்படும்.

ஒப்புதல் அளிக்க மறுப்பு: நீட் தோ்வுக்கு முறைக்கு மாற்றாக சரியான மருத்துவ மாணவா் சோ்க்கை முறை குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா்நிலைக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கைச் சட்டம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநா் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசுத் துறைகள் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்தது.

ஆனால், இவற்றையெல்லாம் ஏற்காமல், நீட் விலக்குச் சட்ட மசோதாவுக்கான ஒப்புதலை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. நமது மாணவா்களுக்குப் பெரும் பேரிடியாக வந்துள்ள இந்தச் செய்தியை கனத்த இதயத்துடன் பேரவையில் தெரிவிக்கிறேன்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்துள்ள மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், பேரவையின் தீா்மானங்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள்.

ஆலோசனைக் கூட்டம்: நீட் தோ்வு விவகாரத்தில் நமது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து இருக்கலாம். ஆனால், நீட் தோ்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூா்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநா்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

மேலும், இதுதொடா்பாக சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் தலைமைச் செயலகத்தில் வரும் 9-ஆம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நமது சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவா்கள், பெற்றோா்களின் சாா்பாக, அவா்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று முதல்வா் கூறினாா்.