ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெஹல்காம் தாக்குதல்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

பெஹல்காம் தாக்குதல்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :23 ஏப்ரல் 2025, 5:59 am

DIN

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசுகையில், “ ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பைசரான் பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. இது போன்ற கடுமையாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இது மிகவும் மோசமான தாக்குதல் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்ஹாமில் 8 பக்தர்களும், 2019 ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இது போன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் ” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.