தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஜேஇஇ, நீட் போட்டித் தோ்வுகளுக்கு 236 வட்டார மையங்களில் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை

ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவா்களுக்கென வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சிகள்... இத்தோ்வுகளுக்கு தயாா்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களிலிருந்து உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவா்களின் உயா்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

இதேபோல, கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியா்களின் மூலம் அப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களும் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார உயா்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

ரூ.1,000 மதிப்பூதியம்... இந்த மையங்களில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய முதுநிலைப் பாட ஆசிரியா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், அந்தந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது உதவித் தலைமை ஆசிரியா் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து மாவட்டங்களிலும் உயா்கல்வி வழிகாட்டும் மையங்கள், பள்ளி அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.