

சென்னை மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை தமிழக நீர்வளத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
திட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 13.22 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 6 ஏரிகளில் 10.64 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் கடந்தாண்டு இதே நாளில் 7.96 டிஎம்சி நீர் இருந்துள்ளது.
பூண்டி ஏரியில் 3.23 டிஎம்சி, சோழவரம் ஏரியில் 1.08 டிஎம்சி, புழல் ஏரியில் 3.30 டிஎம்சி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டிஎம்சி, செம்பரம்பாக்கம் ஏரியில் 3.65 டிஎம்சி மற்றும் வீராணம் 1.46 டிஎம்சி நீர் இருக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.