

சென்னையில் நாளை டிச. 6ஆம் தேதி, சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வருமா? பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் கவனத்துக்கு, ஒவ்வொரு விடுமுறை நாளும், ஒரு சனிக்கிழமை பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, டிச. 2ஆம் தேதி டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் பெய்த மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில், நாளை அனைத்து உயர்நிலை மற்றும் உயர்மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிச. 2ஆம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழை சற்று ஓய்ந்திருந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.