Heavy rain in Tenkasi: Bathing prohibited at courtallam Main Falls
குற்றாலம் பிரதான அருவிENS

தென்காசியில் கனமழை: குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை!

குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி...
Published on

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Summary

Heavy rain in Tenkasi: Bathing prohibited at courtallam Main Falls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com