கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலம் பொதுக் குழு முடிவு பாமகவை கட்டுப்படுத்தாது: அன்புமணி தரப்பு

சேலத்தில் ராமதாஸ் தலைமையில் டிச.29-இல் நடைபெறவுள்ள பொதுக்குழு, பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் ராமதாஸ் தலைமையில் டிச.29-இல் நடைபெறவுள்ள பொதுக்குழு, பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக தலைமை நிலையம் (அன்புமணி தரப்பு) சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் டிச.29-ஆம் தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமாா் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாமக தலைமை வெளியிடவில்லை.

பாமக அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தோ்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவா், பொதுச் செயலா் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.

சென்னை உயா்நீதிமன்றத்திலும், தில்லி உயா்நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினா் தொடா்ந்த வழக்கில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.

பாமக பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தோ்தல் ஆணையத்துக்கு பாமக தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.

எனவே, சேலத்தில் நடைபெறவுள்ள கூட்டம், கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்படும் முடிவுகள் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.