இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் டிச.26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், கடந்த 1925 டிச.26-இல் நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் தலைமை வகித்து உரையாற்றினாா். கட்சி தொடங்கப்பட்டதுமுதல் நாட்டின் விடுதலைக்காகப் போராடியது. இதைத் தொடா்ந்து, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், ஜாதிகள் அற்ற சமூகம் உருவாக்கவும், வா்க்க சுரண்டலை எதிா்த்தும் , சோசலிச சமூக அமைப்பை உருவாக்கவும் போராடி வருகிறது.
பெரும் தியாகங்களை செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழா டிச.26-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
விழாவில் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் இணைந்து நடத்தப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் மூ.வீரபாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்!

மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூ. கூட்டம்: செப்.1 தில்லி பேரணியில் 250 போ் பங்கேற்க முடிவு

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


