
இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்போது இயக்கி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் தனுஷின் இட்லி கடை படத்தில் ராஜ்கிரண், நித்யா மெனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் தேதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
போஸ்டரில், நடிகர் அருண் விஜய் குத்துச் சண்டை வீரராகவும், அவரது உதவியாளராக தனுஷ் நிற்பது போன்றும் வெளியிட்டுள்ளனர். இதுவரையில் வெளியான இட்லி கடை போஸ்டர்களில் கிராமத்து வாசம் வீசிய நிலையில், தற்போது வெளியிட்டுள்ள போஸ்டர் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதனால், படத்தின் மீதான ஆவல் மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் 52-ஆவது படமான இட்லி கடை வெளியாகும் அதே நாளில் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படமும் வெளியாகிறது.
இதையும் படிக்க: விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.