மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ.7,375 கோடி தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2025, 11:26 am

DIN

தமிழகத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து முடிவு செய்யப்பட்டது. தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம், 19 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

தோல் அல்லாத பொருள்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற துறைகளில் புதிய முதலீடுகள் செய்யப்படுவதாகவும், தொழில் திட்டங்கள் பெரம்பலூா், தூத்துக்குடி, திருச்சி, வேலூா் மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.

முன்னதாக, அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் 'பெல்ட் ஏரியாக்களில்' ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்று எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.