
காதலர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
தனது காதலை சொல்பவர்களும், காதலை சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான பண்டிகையான காதலர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் ரோஜாப்பூகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
கொத்தாக ஒரே கட்டில் 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா ரூ.500 வரையிலும் விற்பனையாகிறதாம்.
அதுபோல, பிங்க் ரோஜா, ஆரஞ்சு ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளிட்ட வகைகள் முறையே ரூ.400, ரூ.350 போன்ற விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
மொத்தவிலையில் ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.25 ஆக இருந்து. இது சில்லறை விற்பனையில் ரூ.30க்கு விற்கப்படுகிறது.
பல பூச்சந்தைகளில் ஆயிரக்கணக்கான பூங்கொத்துகள் விற்பனையாகிவிருப்பதால், மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துளள்னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







