மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

பாஜகவின் எச். ராஜாவுக்கு தவெக எழுப்பிய கேள்வி தொடர்பாக...

News image
தவெக கொடி.
Updated On :18 பிப்ரவரி 2025, 10:24 am

DIN

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், எச். ராஜாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை.

மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் (concurrent list) இருப்பதால் மத்திய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் மத்திய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்?

இப்படி 'மும்மொழிக் கொள்கை' என்ற பெயரில் நடக்கும் நவீன இந்தித் திணிப்பை தட்டிக்கேட்ட எங்கள் தலைவரை, பல மொழிகளில் அவரது படங்கள் வெளியாவதை, திரைப்படப் பாடலை, குடும்பத்தினர் படிக்கும் கல்விச் சாலையை எல்லாம் இழுத்து, திரித்து எழுதியுள்ளார் பாஜகவைச் சார்ந்த எச். ராஜா.

திரைப்படம் தொழில். கல்வி என்பது தொண்டு. தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தனிமனிதர் வேறு; அரசின் கொள்கை வேறு. மாநில தன்னாட்சி உரிமை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை அனைத்தும் தனித்துவமானது. யார் எங்கு படிக்கிறார் என்பது தனிநபர் விருப்பம். ஆனால் ஓர் அரசு எந்த மொழியில் கற்றுக் கொடுக்கிறது என்பது கொள்கை.

இத்தனை சீரியசான பிரச்னைக்கு ஆதாரமாய் சினிமா பாடலையா கொண்டு வருவீர்கள்? ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டாய் மாறுவதற்கு மும்மொழி வேண்டுமாம். அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்கள் மத்தியில் அந்த நிலவுக்கே சந்திராயனை ஊட்டிய அறிவியல் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்காதவர்கள்தான். இது உங்களுக்கும் உங்கள் அட்மினுக்கும் தெரியாதா?

மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், எங்கள் தலைவர் இது குறித்துப் பேசக்கூடாது என்கிறார். இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னால் யார் வீட்டுக் குழந்தை எங்கு படிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா?

உங்கள் பேரில் இருக்கும் தமிழ் நம் ஊரிலும் இருக்கட்டும் என்று அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.