சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ் ஒரு கொசு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு...

News image
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.- கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2025, 6:48 am

DIN

ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை ஓபிஎஸ் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், ”ஒரு காலத்தின் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை, இன்று இடைத்தேர்தலில்கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் தன்னிடம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் குறித்து கேட்டதற்கு, “ ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தக் கொசுவைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை. ரகசியம் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு மேலான ஓபிஎஸ் செய்கிறார். தொண்டர்கள் மத்தியில் இது எடுபடாது” என்றார்.

மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய ஜெயக்குமார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். மொழி என்பது தனிப்பட்ட விஷயம். ஹிந்து பிடிக்கும் என்றால் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்.

தமிழகத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. தமிழ் தாய்மொழியாக இருக்கின்றது. தமிழ் மொழி அழியாமல் இருக்க பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஹிந்தி மொழித் திணிப்பை தமிழக மக்கள் ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.