ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: காங்கிரஸ் மீண்டும் போட்டி

ஈரோடு கிழக்கு வேட்பாளர் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி.
செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த நிலையில், அத் தொகுதிக்கு பிப். 5-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும். வேட்பாளா் யாா் உள்ளிட்ட விவரங்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவா்கள், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com