தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மகா கும்பமேளா: அயோத்தி ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்

மகா கும்பமேளாவையொட்டி, ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி செல்லும் விரைவு ரயில் பிரயாக்ராஜ் சியோகி வழியாக இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 9:47 pm

Din

சென்னை: மகா கும்பமேளாவையொட்டி, ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி செல்லும் விரைவு ரயில் பிரயாக்ராஜ் சியோகி வழியாக இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி கன்டோன்மன்டுக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 22613) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மகா கும்பமேளா விழாவை முன்னிட்டு பிப்.2-ஆம் தேதி மாணிக்பூா், பிரயாக்ராஜ் சியோகி, ஜியோனாத்பூா், வாரணாசி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.