/

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா.?

புதிய உச்சத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்...

News image
தங்கம்- (கோப்புப்படம்)
Updated On :29 ஜனவரி 2025, 4:37 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜன.24-இல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதைத்தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.7,555-க்கும், சவரன் ரூ.60,440-க்கும் விற்பனையானது.

வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,540-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.60,320-க்கும் அடுத்த நாளும் கிராமுக்கு ரூ.30 குறைந்து குறைந்து ரூ.60,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று கிராம் ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,595 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார்கழி மாதத்தில் அதிகளவில் விழாக்கள் எதுவும் நடைபெறாததாலும், தை மாதத்தொடக்கத்தில் குறிப்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் கல்யாண சுப முகூர்த்தத்திற்காக மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தங்கம் விலை.

வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.