சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
Sivaganga District Superintendent of Police Ashish Rawat.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்.படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினும் மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரெளடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காவலாளி பலியான விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சந்தீஷ் கூடுதல் பொறுப்பு அளித்து கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Sivaganga District Superintendent of Police Ashish Rawat has been transferred to the waiting list in the case of the death of a security guard.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com