அஜித்குமார் கொலை: தவெகவின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

போராட்டம் நடத்த அனுமதி கோரிய தவெகவின் மனு நிராகரிக்கப்பட்டது பற்றி...
Madras HighCourt
சென்னை உயர்நீதிமன்றம்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், எண்ணிடப்படும் பட்சத்தில் திங்கள்கிழமை விசாரிப்பதாகவும், போராட்டத்தை தள்ளிவைக்கவும் தவெகவுக்கு அறிவுரை வழங்கினார்.

Summary

The petition filed in the Madras High Court by the Tamilaga Vetri kazhagam seeking permission to hold a protest in the Ajith Kumar murder case has been rejected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com