
கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன்கள் அஸ்வின்(5), ஆசூன்(4), அரவிந்த் மகன் ரிஷின்(5), காந்தி மகன் மாலின் (5), கேசவனின் மகன் தர்ஷன் (5) உள்ளிட்ட 5 சிறுவர்கள், வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி என்ற விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை அறிந்த பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து சிறுவர்களை எம்எல்ஏகள் கேபி முனுசாமி(வேப்பனபள்ளி) கே அசோக் குமார் (கிருஷ்ணகிரி) தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களையும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகளின் மருத்துவ செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் ஆனால் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.