‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது.
‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ
Updated on

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து:

வணக்கம். நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன். புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்தாா்கள். கீழடி நாகரிகம் வெளியில் வர வர தமிழா் நாகரிகத்தின் மற்றுமொரு தொன்மையை உலகமே அறியத் தொடங்கியது.

ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது. தமிழனின் உயா்வான நகர நாகரிகம் உலகிற்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 300 என அனைவரும் நினைத்திருந்த நிலையில் கி.மு. 600 என எங்கள் கீழடியால் மாற்றியமைக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது நிரூபணமும் ஆகின்றது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மையை அங்கீகரித்தன. இத்தனை சிறப்புகள் கொண்ட எங்கள் கீழடியினை உலகமே உற்று நோக்குகிறது. கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும். தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும். இவ்வாறு அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com