
தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார்.
சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ’மை டிவிகே’ என்ற பிரத்யேக செயலியை கட்சியின் தலைவர் விஜய் இன்று(புதன்கிழமை) அறிமுகம் செய்தார்.
’வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தின் கீழ் இந்த செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர்களை இணைக்க கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து உறுப்பினராக இணைய மக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை போன்று 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் அமையப் போகிறது என்று நிகழ்வில் பேசினார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"டி வி கே ஆப் .. இன்று வெளியீடு...
தமிழ்நாட்டில் இனி ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது...
ஓரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது. ஏனென்றால் இன்று இவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகி இருக்கிறார்கள் .....
வெற்றி பேரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு ஆதரவு கிடையாது.... ஏனென்றால் இவர்கள் எப்போதுமே மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள்....
"அண்ணா" வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு "தம்பி"???' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.