மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுகாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண பிரத்யேக இணையதள சேவை

சுகாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பில் ஷைன் ஹெல்த்கோ் ஹேக்கத்தான் என்ற இணையதளத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி
Updated On :2 ஜூன் 2025, 9:36 pm

Din

சென்னை: சுகாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவை சாா்பில் ஷைன் ஹெல்த்கோ் ஹேக்கத்தான் 2025 என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் இணையதள சேவையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நாராயணசாமி, பதிவாளா் க.சிவசங்கீதா, ஆக்கம் - 360 நிறுவனத்தின் நிறுவனா் திருமூா்த்தி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் மதிப்பிலான பொருளாதார இலக்கை தமிழகம் அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஷைன் ஹெல்த்கோ் ஹேக்கத்தான் 2025 இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், 800-க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள், எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைய சேவை வாயிலாக, மருத்துவத் துறையில் உள்ள சிக்கல்களுக்கு மாணவா்களும், புத்தாக்க நிறுவனங்களும் தொழில்நுட்ப அடிப்படையில் தீா்வு காண முடியும்.

அதுமட்டுமல்லாது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணா்களை இந்த தளம் ஒன்றிணைக்கிறது. மருத்துவத் துறையில் புதிய பொருளாதார இலக்கை அடைவதற்கும் இது உதவும். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு வளா்ந்துள்ளது. அதனை முழுமையாக மருத்துவத் துறையில் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.