பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
பரந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் எதிர்ப்புகளை மீறி, சுமார் 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதனிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அனுமதிக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில், தொழில்துறை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்(டிட்கோ) அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க : 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ஐஆர்சிடிசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுமா? முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



