தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக தில்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவருக்கு, எங்களுக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை.
தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் - நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.
அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசலில் உள்ளது. உங்கள் தில்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கோருவதில்லை.
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் குரல் எழுப்புவோம்.
மாநில நலனை நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


