கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் பற்றி...

News image

திமுக சார்பில் பி. வில்சன் வேட்புமனு

Updated On :9 ஜூன் 2025, 11:32 am

DIN

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதன்படி திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அக்கட்சித் தலைவர் கமலஹாசனும் வேட்புமனு கொடுத்துள்ளார்.

அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ் இன்பதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து நாளை (ஜூன் 10) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இவர்களுடன் சுயேச்சைகள் 7 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இதனால் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.