
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தொடர்ந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதங்களையும் வழங்கி ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.