மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!

சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி...

IT raids actor Arya's restaurants!

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை - din

Published On :18 ஜூன் 2025, 10:56 am IST

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உணவகத்தின் கிளைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் நடிகர் ஆர்யா நடத்தி வருவதாக கூறப்பட்டது.

சென்னை அண்ணா நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன.

இந்த உணவகங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில், சென்னை அண்ணா நகரில் உள்ள சீ ஷெல் உணவகத்துக்கு இன்று காலை வருகைதந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

அதேபோல், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட கிளைகளிலும் 8 குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் பிரிந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சீ ஷெல் உணவகத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.