அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
amul kandasamy
அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி.
Published on
Updated on
1 min read

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், சுயநிதி என்ற மகளும் உள்ளனர்.

இதனிடையே அமுல் கந்தசாமி மறைவு அதிமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த அமுல் கந்தசாமி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு பெற்றிபெற்றார்.

இந்த நிலையில் வால்பாறை தொகுதி எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கட்சியின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கட்சிப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com