பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது!

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது பற்றி...
Water Bell scheme implemented in tn schools
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) நடைமுறைக்கு வந்தது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு, பகல் 1 மணிக்கு, பிற்பகல் 3 மணிக்கு என 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று(ஜூன் 30) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Water Bell scheme, which ensures that students drink water in schools in Tamil Nadu, came into effect today (June 30).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com