அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்றைய நிலவரம்.

News image
தங்கம் (கோப்புப்படம்)
Updated On :4 மார்ச் 2025, 5:26 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கும் விற்பனையானது.

வாரத் தொடக்கமான திங்கள்கிழமை தங்கம் விலையில் எவ்வித மாற்றமின்றி சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ, 64,600 வரை விற்பனையானது.

இந்த நிலையில், இன்று(மார்ச். 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.8,010-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ரூ. 2 உயர்ந்து கிராம் ரூ. 107.00-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.