அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

கோப்புப்படம்.

Published On :5 மார்ச் 2025, 5:32 am IST

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூா் வரும் பல்லவன் விரைவு ரயில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 6, 7) தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இதேபோல், மன்னை விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், முத்துநகா் விரைவு ரயில், புதுச்சேரி மெமு பயணிகள் ரயில் மற்றும் மண்டபம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில்கள் மாா்ச் 8-ஆம் தேதி தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

ஹைதராபாதிலிருந்து தாம்பரம் வரும் சாா்மினாா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக மாா்ச் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூா் - மதுரை வைகை விரைவு ரயில் மாா்ச் 6, 7 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல், ராமேசுவரம் சேது விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி மெமு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

பாதை மாற்றம்: வெளிமாநிலங்களில் இருந்து வரும் விரைவு ரயில்கள் சென்னை எழும்பூா் வழியாக வருவதற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, செகந்திராபாத் - ராமேசுவரம் சிறப்பு ரயில் மாா்ச் 5-ஆம் தேதி சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு வழியாகச் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு சா்காா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி சென்னை எழும்பூா், மாம்பலம், தாம்பரம் வழியாகச் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, பெரம்பூா், அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும்.

காச்சிக்கூடா - செங்கல்பட்டு விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், மாம்பலம், தாம்பரம் வழியாகச் செல்வதற்கு பதிலாக மேல்பாக்கம், காஞ்சிபுரம், வழியாகச் செங்கல்பட்டு செல்லும்.

மண்டபத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட பனாரஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை பிரதான பாதையில் இயக்கப்படாமல் புகா் மின்சார ரயில்கள் தடத்தில் இயக்கப்படும். இதனால், எழும்பூரில் இந்த ரயில் நிற்பதற்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.