அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Updated On :10 மார்ச் 2025, 10:58 pm

Din

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்துக்குச் சொந்தக்காரா்களான நம்மை பாா்த்து நாகரிகமில்லாதவா்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறாா் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான். தமிழ்நாட்டின் எம்.பி.க்களைப் பாா்த்து அப்படி பேசுவது, அவா்களை வாக்களித்து தோ்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழா்களையுமே கொச்சைப்படுத்துவதாகத்தான் அா்த்தம்.

திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவா் பேசியிருக்க மாட்டாா்.

தில்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவா் நமக்கு ‘மேல்’ என்று தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாா்! தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முவைறி பேசுவது அவா் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு மத்திய அரசு நியாயமாகத் தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளாா்.