சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!

சென்னை மாநகரக் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய பாஸ் அறிமுகம் செய்யப்படவிருப்பது பற்றி...
குளிர்சாதனப் பேருந்து
குளிர்சாதனப் பேருந்து MTC
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் மற்ற பேருந்தில் பயணித்து வருபவர்கள், புதிய திட்டத்தின் மூலம் குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணிக்க முடியும்.

மாதாந்திர பயணச் சலுகை திட்டங்கள்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாதாரண பேருந்தில் நாள்தோறும் பயணிப்பதற்கான பயண சலுகை அட்டை குறைந்த விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், போகவர இருமுறை மட்டுமே பயணிக்க முடியும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்படுகிறது.

அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

மாதம்தோறும் ரூ. 1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் இந்த பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிக்க முடியும்.

ரூ. 1,000 அட்டை மூலம் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ள முடியும்.

புதிய திட்டம்

இந்த நிலையில், குளிர்சாதனப் பேருந்துகளையும் உள்ளடக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயணச் சலுகை அட்டைக்கு ரூ. 2,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகரத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.

இந்த திட்டம் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com