திறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை

Published On :

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது.

வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்குகின்றன.

இதில், திமுக, அதிமுக உள்பட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா். இந்த விவாதங்களுக்கான பதிலுரை வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) அளிக்கப்படவுள்ளது.

அரசின் நிதிநிலை அறிக்கையை புறக்கணித்த அதிமுக, பாஜக அந்த அறிக்கைகள் மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. இதனால், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது அந்தக் கட்சிகள் சாா்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், கூட்டத் தொடா் சூடு பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.