/

சென்னையில் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்காக்கள்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் பற்றி...

News image
பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநகராட்சி மேயர் பிரியா.
Updated On :19 மார்ச் 2025, 8:15 am

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்களில் சிறப்பு குழந்தைகளுக்கான உபகரணங்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயா் ஆா். பிரியா இன்று தாக்கல் செய்தார்.

அப்போது சிறப்பு குழந்தைகளுக்கான பூங்காக்கள் குறித்த அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட எம்எம்டிஏ, கேகேஆர் முதல் பிரதான சாலை, வாசுகி நகர், அண்ணா பூங்கா, முரசொலி மாறன் பூங்கா உள்பட 10 பூங்காக்களில் சிறப்புக் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மக்கள் அதிகளவில் கூடும் 70 பூங்காக்களில் மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கைகளுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மேயர் அறிவித்தார்.

அதேபோல், பூங்காக்களில் நடைபயிற்சி செய்பவர்கள் பயன்பெறும் வகையில் சுய உதவிக் குழுக்கள் மூலம் தரமான சுவையான உணவுப் பொருள்கள் விற்பனை மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.