'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து...
TN CM Stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்IANS
Updated on
1 min read

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும் திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் ஹெரோன்பால், சதீஷுக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் பிறப்பித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!

அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அதிமுகவும் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com