12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக...

கோப்புப் படம்

Published On :

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், மதுரை, சேலம் உள்பட 6 மத்திய சிறைகளில் தேர்வெழுதிய 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியானது.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.

Story image
Story image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை, சேலம் உள்பட 6 மத்திய சிறைகளில் தேர்வெழுதிய 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைக் கைதிகளில் 230 பேர் (97.05%) தேர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய 65 சிறைக் கைதிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, சேலம் மத்திய சிறையில் தேர்வெழுதிய 25 சிறைக் கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை சிறைக் கைதி சக்திவேல் மற்றும் சேலம் சிறைக் கைதி கோபி ஆகிய இருவரும் அதிகபட்சமாக 412 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.