ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
TN Chief Minister Stalin, EPS
முதல்வர் மு.க. ஸ்டாலின் |அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிIANS
Updated on
1 min read

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றிருக்கும் நிலையில், இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?

திரு. ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அறிவாலய மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்தீர்களே..

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே?

அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு எஃப்ஐஆர் லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "சார்"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...

நான் கேட்ட கேள்வி என்ன?

#யார்_அந்த_தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, அமலாக்கத் துறை ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- யார்_அந்த_தம்பி? என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com