

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேர் திங்கள்கிழமை காலை கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சென்னை பனையூரில் உள்ள தாவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடைப்பட்டதால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ தரப்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர் கிரீட்டை சேர்ந்த சென்னை அதிகாரிகள் 2 பேர் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.