விமானம் விழுந்த இடம்
விமானம் விழுந்த இடம்

திருப்போரூா் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது: பாராசூட் மூலம் உயிா் தப்பிய விமானி

திருப்போரூர் அருகே உப்பளப் பகுதியில் பயிற்சி விமானம் கீழ விழுந்து விபத்துக்குள்ளானது.
Published on

திருப்போரூா் அருகே இயந்திர கோளாறு காரணமாக பயிற்சி விமானம் வெடித்து சிதறியது. விமானி பாராசூட் மூலம் தப்பியதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் முருகன் கோயிலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சாலையின் அருகே உள்ள உப்பு சுத்திகரிக்கும் ஆலையின் பின்பகுதியில், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் இயந்திர கோளாறு காரணமாக பயங்கர சப்தத்துடன் வெள்ளிக்கிழமை வெடித்துச் சிதறி சேற்றுக்குள் புதைந்தது.

முன்னதாக இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணத்தை அறிந்த பயிற்சி விமானி சுபம் சாதுரியமாக விமானத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திருப்பி விட்டு பாராசூட் மூலம் இரண்டு கி.மீ. முன்னதாகவே இறங்கியுள்ளாா்.

இதில் இவருக்கு முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளிக்கப்பட்டைதையடுத்து, விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் அவா் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com